முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள்: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பயனாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.43 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். காப்பீடு திட்ட பயன்களை 1,822 மருத்துவமனைகள் மூலம் பெறலாம்.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக்கூடாது என இந்த சிறப்பு முகங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் விரைவில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும். சென்னையில் காலியாக உள்ள 1021 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 1000 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மதிப்பெண்கள் தர வேண்டும் என்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்தில பணியாற்றிய மருத்துவர்கள்,செவிலியர்கள், பணியாளர்கள் என 4000 பேருக்கு 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எம்.ஆர்.பி மூலம் பணியில் அமர்த்தப்படுபவர்களும், கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கேட்கிறார்கள். முதலமைச்சர் மதிப்பெண் தரலாம் என முடிவெடுத்து அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் காலி பணியிடங்களை நிரப்புவது முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு