மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 

சென்னை: மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இன்று 270 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், மார்ச் 9-ல் 430 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு நாளை, நாளை மறுநாள் 70 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்