முதல்வர் பிறந்தநாளையொட்டி சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: முதல்வர் பிறந்தநாளையொட்டி நங்கநல்லூரில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், இலவச மருத்துவ முகாம் நங்கநல்லூரில் நேற்று முன்தினம் நடந்தது. மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். 167வது வட்ட திமுக செயலாளர் நடராஜன், ரமணா, சதீஷ், அய்யனார், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மருந்து, மாத்திரை, ஹார்லிக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் இப்ராகிம், பாஸ்கரன், பூபாலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டுபிரகாஷ், வட்டச் செயலாளர்கள் உலகநாதன், சாலமோன், ஏசுதாஸ், ஜெகதீஸ்வரன், வேலவன், சுரேஷ், கேபிள் ராஜா, வேலு, மு.வெள்ளைச்சாமி, வேல்முருகன், ஜெயக்குமார், ஸ்ரீகாந்த், பிரான்சிஸ், குருமூர்த்தி, நலச்சங்கம் சார்பாக ஐயம்பெருமாள், குமாரசாமி, ரவீந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு