தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறல்..பாஜகவின் புல்டோசர் ஆட்சி மனோபாவம் மாறவில்லை: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!!

டெல்லி: மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபும் வழக்கமான நடைமுறையும் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறல்: காங்கிரஸ்
மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபும் வழக்கமான நடைமுறையும் மீறப்பட்டுள்ளதாக காங். குற்றச்சாட்டியுள்ளது. 18-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை உறுப்பினராக அதிக முறை பணியாற்றியவரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவதே மரபு மற்றும் நடைமுறை. எம்.பி.யாக 8 முறை தேர்வான கொடிக்குன்னில் சுரேஷ் அல்லது வீரேந்திரகுமார் தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். வீரேந்திரகுமார் அமைச்சரானதால் காங்கிரசைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். மோடி அரசோ, மரபு மற்றும் நடைமுறையை புறக்கணித்து பர்த்ருஹரி மகதாப்பை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளது. மரபு மற்றும் நடைமுறைகளை மீறி பாஜகவைச் சேர்ந்தவரை தற்காலிக சபாநாயகராக நியமித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவின் புல்டோசர் ஆட்சி மனோபாவம் மாறவில்லை: காங்கிரஸ்
மக்களவை தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் பாஜகவின் புல்டோசர் ஆட்சி மனோபாவம் மாறவில்லை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். அதிக முறை மக்களவைக்கு தேர்வான கொடிக்குன்னில் சுரேஷக்கு பதில் பர்த்ருஹரி தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்ய வேண்டும். தற்போது மோடி ‘ஸ்ரீ 400’ அல்ல ‘ஸ்ரீ 240’ தான் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

தலித்துகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக புகார்
தலித்துகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி எதிரானவர் என்று தாம் கருதுவதாக காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். தலித் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது என்று அவர் கூறினார்.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!