சோயா மசாலா வறுவல்

தேவையானவை

சோயா உருண்டைகள் – 1 கப்
நறுக்கிய வெங்காயம் – அரை கப்
பச்சை பட்டாணி – 1 கப்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் -தலா 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள், கரம் மசாலா – தலா 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க:

தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2

செய்முறை:

சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்துப் பிழிந்து இரண்டிரண்டாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து பொடி வகைகளை சேர்த்து பிசறவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து இதனுடன் சோயா உருண்டைகள். பிசறிய பச்சைப்பட்டாணி, உப்பு சேர்த்து கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கலந்து வைத்தவற்றைச் சேர்த்து மசாலா வாசம் போக நன்றாகக் கிளறவும். நல்ல மணம் வந்ததும் இறக்கிவிடவும்.

Related posts

ஜவ்வரிசி அல்வா

சோயா பிரியாணி

கேப்சிகம் மசாலா கிரேவி