சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு

புதுடெல்லி: ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறை வெளியிட்ட அறிக்கை: சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி வரி 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்த இந்த வரி குறைப்பு, அடுத்தாண்டு, மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.அரசின் முடிவால் உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெயின் விலை குறையும். சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி குறைப்பு, விலை குறைய உதவும்.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி வரி 32.5 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சர்வதேச அளவில் விலை மிகவும் அதிகரித்த போது, உள்நாட்டு சந்தை விலையிலும் அது பிரதிபலிக்கிறது. நுகர்வோர்களுக்கு தேவையான அளவு கிடைக்கும் வகையில், நாட்டில் சமையல் எண்ணெய் விலைகளை உணவு மற்றும் பொது விநியோகத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்