தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை 25ம் தேதி வரை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்திலும் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 25ம் தேதி வரையில் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனால், தென் மற்றும் வடதமிழகத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக, புதுக்கோட்டையில் 90 மிமீ மழை பெய்துள்ளது.

இதற்கிடையே, நாமக்கல் மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களில் 101 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை அங்கு குறைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் 25ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது