தென்மேற்கு பருவமழை தீவிரம் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ‘‘பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தற்போது தமிழ்நாட்டிலும் தீவிரம் அடைந்துள்ளது. எனவே, தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

நேற்று இரவில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னை புறநகரில் சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 170 மிமீ மழை பெய்துள்ளது. களியல் 160மிமீ, குழித்துறை 150மிமீ, திற்பரப்பு, கரூர், பரமத்தி 140மிமீ, ஆனைப்பாளையம் 130மிமீ, சிவலோகம், 120மிமீ, பவானி, சின்னகல்லார் 110மிமீ, குருந்தன்கோடு, தக்கலை, கொடநாடு, பெருந்துறை 100 மிமீ, பேச்சிப்பாறை, புள்ளம்பாடி, கோவை, சோழவந்தான், கூடலூர் 90மிமீ, ஆண்டிப்பட்டி, கல்லக்குடி, சென்னை கொளத்தூர், குமாரபாளையம், கங்கவல்லி, பரமத்திவேலூர், வால்பாறை 80மிமீ, கொடைக்கானல்,

நாமக்கல், 70மிமீ, சென்னை வில்லிவாக்கம், திருச்சி, நாகர்கோவில், சென்னை திருவிக நகர், சத்தியமங்கலம், ஆலங்குடி, மேட்டுப்பட்டி, கொடுமுடி, கவுந்தம்பாடி 60மிமீ, அருப்புக்கோட்டை, விராலிமலை, வாடிப்பட்டி, சோத்துப்பாறை, சென்னை மணலி, நடுவட்டம், தஞ்சாவூர் 50மிமீ மழைபெய்துள்ளது. சென்னையில் ராயபுரம், திருவிக நகர், சத்யபாமா பல்கலைக் கழகம், அம்பத்தூர், ஐஸ்ஹவுஸ், மாதவரம், பெரம்பூர், அயனாவரம், வானகரம், அடையாறு, தரமணி, நுங்கம்பாக்கம், அண்ணாபல்கலைக் கழகம், மதுரவாயல், தேனாம்பேட்டை, ஆலந்தூர், சென்னை விமான நிலையம், சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, முகலிவாக்கம், தாம்பரம், பெருங்குடி, ஆகிய இடங்களில் 10மிமீ முதல் 20மிமீ வரை மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென் மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 18ம் தேதி வரை கனமழை பெய்யும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு