தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க முறைகேடு தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாக முறைகேடு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பி.டி.ராஜன், காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.சிதம்பரநாதன் உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களில், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்துக்கு பலர் தங்கள் சொத்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த சங்க நிர்வாகத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. சங்கத்தின் பெயரில் வைக்கப்பட்டிருந்த நிரந்தர வைப்பு தொகை ரூ.1.82 கோடி தற்போது ரூ.8 லட்சமாக குறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் சங்கத்திற்கு சொந்தமான இடங்களை வாடகைக்கு விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2014 முதல் செல்வராஜ் என்பவர் தொடர்ந்து தலைவராக செயல்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனுதாரர்கள் கொடுத்த புகார் மீது வடசென்னை மாவட்ட பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் சங்க நிர்வாகத்துக்கும், புகார்தாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிதம்பரநாதன் சார்பில் மூத்த வழக்கறிஞர் தாட்சாயிணி ரெட்டி, வழக்கறிஞர் ஏ.மனோஜ்குமார் ஆஜராகினர். சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சங்கத்தில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். பதிவு துறைக்கு உத்தரவிட்டதில் வறையும் காணமுடியவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்