தென்மாவட்டங்களில் ஜன.2ல் பள்ளிகள் திறக்கும்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: தென் மாவட்டங்களில் ஜனவரி 2ல் பள்ளிகள் திறக்கும்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதி கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை மீண்டும் நடத்துவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

தென் மாவட்டங்களில் ஜனவரி 2ல் பள்ளிகள் திறக்கும்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2 முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம்
6 முதல் 9ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்