வங்க தேச பிரதமர் ஹசீனாவுடன் சோனியா காந்தி சந்திப்பு: பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை

புதுடெல்லி: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி,எம்பி ராகுல் காந்தி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின் டெல்லியில் தங்கியிருந்த ஷேக் ஹசீனாவை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அவர்கள் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், வங்க தேச பிரதமரை, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி,முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று பிற்பகல் சந்தித்து பேசினர். இரு தரப்பு உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஷேக் ஹசீனாவுடன் வந்துள்ள வங்க தேச உயர்மட்ட குழுவினரையும் சோனியா காந்தி சந்தித்து பேசினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா குடும்பத்துக்கும், காந்தி குடும்பத்துக்கும் நீண்ட கால நட்புறவு உள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை