சூரியசக்தி மின் மீட்டருக்கான விலை நிர்ணயம்

சென்னை: சூரியசக்தி மின்சாரத்தை கணக்கெடுக்கும் மீட்டருக்கு மின் வாரியம் விலை நிர்ணயித்துள்ளது. வீடுகள், பள்ளி, கல்லூரி, சிறு நிறுவனங்கள் போன்றவற்றில் `ரூப் டாப்’ எனப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இரவு நேரத்திலும், மழைக் காலங்களிலும் சூரியசக்தி மின்சாரம் கிடைக்காது என்பதால், மின்சாரம் கிடைக்காத நேரங்களில் மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் சூரியசக்தி மின்சார உற்பத்தியானது, மின் வாரியத்திற்கு வழங்கியது எவ்வளவு, மின்வாரிய மின்சாரத்தைப் பயன்படுத்தியது எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக கணக்கிட, இருதிசைப்பட்ட (பை டைரக்ஷனல்) மீட்டரை மின் வாரியம் பொருத்துகிறது.

இந்த மீட்டரின் விலை அதிகமாக உள்ளதால், அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, ஒருமுனை இணைப்பிற்கான இருதிசைப்பட்ட மீட்டர் விலை, மின் இணைப்பு, ஜி.எஸ்.டி வரி போன்றவற்றை உள்ளடக்கி ரூ.2,764ஆகவும், மும்முனை இணைப்பிற்கு ரூ.5,011 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழில் நிறுவனங்களுக்கான மீட்டர் விலை ரூ.10,720 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்