மண் சரிவுகளை தடுக்க நீலகிரியில் மலைப்பாங்கான பகுதிகளில் படிமட்டம் முறையில் விவசாயம்

ஊட்டி : மண் சரிவை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் படிமட்டம் முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், 90 சதவீதம் விவசாயம் நிலங்கள் அனைத்தும் மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற விவசாய நிலங்களில் இங்கு கேரட், உருளைக்கிழங்கு, பீ்ட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உட்பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

மலைப்பிரதேசம் என்பதால், ஆண்டு தோறும் 6 மாதங்களுக்கு மேல் பருவமழை கொட்டி தீர்க்கும். ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் கொட்டி தீர்க்கும். இது போன்ற சமயங்களில் பெரும்பாலான இடங்களில் மண் சரிவு ஏற்படுவது, நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், தோட்டக்கலைத்துறையினர் விவசாய நிலங்களில் மண் சரிவை தடுக்க, படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதேபோல், மத்திய மண் பரிசோதனை நிலையம் ஆகியவைகளும் விவசாயிகளுக்கு படிமட்ட முறையில் மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ள அறிவுரை வழங்கி வருகிறது. இதனால், தற்போது பெரும்பாலான மலைப்பகுதிகளிலும் விவசாயிகள் படிமட்டங்கள் அமைத்து காய்கறி பயிரிட்டு வருகின்றனர்.

ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை, காந்திநகர், ஓடைக்காடு, நஞ்சநாடு, எமரால்டு போன்ற பகுதிகளில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் மலைப்பகுதிகளில் படிமட்டம் அமைத்து விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மழைக்காலங்களில் மண் அரிப்பு மற்றும் மண் சரிவுகளை தடுக்க முடிகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

கொச்சுவேளி அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா? குமரி மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுப்பு