சமூக ஊடகத்தில் ‘பாலோயர்ஸ்’ அதிகரிக்க புற்றுநோய் எனக்கூறி ‘பில்டப்’ கொடுத்த பெண்: மன்னிப்பு கேட்ட பின்னும் திட்டி தீர்த்த மக்கள்

ஹாங்காங்: சமூக ஊடகங்களில் ‘பாலோயர்ஸ்’ அதிகரிப்பதற்காக தனக்கு புற்றுநோய் எனக்கூறி ‘பில்டப்’ கொடுத்த பெண்ணை பலரும் திட்டியதால், அவர் மன்னிப்பு கேட்டு தனது பதிவுகளை நீக்கினார். ‘பிட்னஸ்’ பயிற்சியாளரான மியான் பாவ்போ என்ற பெண், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கணைய புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கூறினார். அப்போதிருந்து அவர் தொடர்ந்து உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்வாறு தன்னம்பிக்கையுடன் இவர் உடற்பயிற்சி செய்வதை பலரும் பாராட்டினர். மேலும் அவரது பெயருடன் கூடிய புற்றுநோய் தொடர்பான ஹேஷ்டேக்குகளும் வெளியாகின.

அவரது புற்றுநோய் ஆலோசனை, உடற்பயிற்சி பதிவிற்கு மக்களிடையே பெருத்த ஆதரவு கிடைத்தது. அத்துடன் அவர் மீது பலரும் அனுதாபத்தை வெளிப்படுத்தினர். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட செய்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில், ‘என் மீது அக்கறை கொண்ட, என்னை ஆதரித்த, என்னை உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், இணையவாசிகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு புற்றுநோய் பாதிப்பு கிடையாது.

என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இவ்வாறு செய்தேன்’ என்று கூறியுள்ளார். இவரது பதிவை பார்த்த அவரை பின்தொடர்பவர்கள், மியான் பாவ்போ கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர், ‘உண்மையில் புற்றுநோயுடன் போராடும் மக்களை கேலி செய்வதற்கு சமம். சமூக ஊடகங்களில் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்’ என்று சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். அதனால் புற்றுநோய் தொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது