தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், திருத்தணியில் கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்த் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், சுப்பிரமணி, கிருஷ்ணன், ஆகியோர் வரவேற்றனர்.

திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தேமுதிக தேர்தல் பணிக்குழு செயலாளர் பேராசிரியர் மகாலட்சுமி மற்றும் தலைமை பேச்சாளர் தம்பி முருகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி 200 பெண்களுக்கு புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் ஆயில் சரவணன், மாவட்ட பொருளாளர் சேகர், மாவட்ட பொறுப்பாளர் கிரி பாபு,

மாவட்டத் துணைச் செயலாளர் தியாகராஜன், சதீஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஒண்டிக்குப்பம் சேகர், ஞானமூர்த்தி, சசிகுமார், பாஸ்கர் ராஜ், மாணவரணி செயலாளர் மனோஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் கராத்தே ஆனந்தன், தொழில்நுட்பணி மாவட்டச் செயலாளர் விஜய், ஒன்றியச் செயலாளர்கள் தென்னரசு, கணபதி, முரளி கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புழல்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் புழல் அம்பேத்கர் சிலை அருகே நடந்தது.

கூட்டத்திற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் டில்லி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாபுராவ், ராஜேந்திரன், ரமேஷ், சிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பார்த்தசாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, 300க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்வில் மாதவரம் மேற்கு பகுதி செயலாளர் புழல் நாகராஜன், கிழக்கு பகுதி செயலாளர் ரஜினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு