கடும் பனிப்பொழிவால் சென்னையில் இருந்து டெல்லி சென்ற 3 ரயில்கள் உட்பட 6 ரயில்கள் தாமதம்!

டெல்லி: வடமாநிலங்களில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் சென்னையில் இருந்து டெல்லி சென்ற 3 ரயில்கள் உட்பட 6 ரயில்கள் தாமதம் என வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய பல ரயில்கள் 6 மணி நேரம் வரை தாமதமாக வருகிறது என வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவாகி வருகிறது. பனிபொழிவின் காரணமாக கடந்த வாரத்தில் காண்புதிறன் 25 மீட்டராக குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காண்பு திறன் முன்னேற்றமடைந்து வருகிறது.

பனிப்பொழிவு காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன. நேற்று (ஜன.01) டெல்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காண்புதிறன் 700 மீட்டராக பதிவானது. மேலும் இன்றும் அப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணாமப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக வடமாநிலங்களில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் சென்னையில் இருந்து டெல்லி சென்ற 3 ரயில்கள் உட்பட 6 ரயில்கள் தாமதம் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய பல ரயில்கள் 6 மணி நேரம் வரை தாமதமாக வருகிறது என வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது