பேரீச்சம்பழத்திற்குள் மறைத்து தங்கம் கடத்தல்: விமான பயணி சிக்கினார்


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்தில் பேரீச்சம்பழத்திற்குள் மறைத்து ₹10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற பயணி பிடிபட்டார். கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக துபாய், குவைத், பஹ்ரைன், சார்ஜா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கடத்தல் குறையவில்லை. இந்தநிலையில் மஸ்கட்டில் இருந்து கோழிக்கோட்டுக்கு நேற்று ஒரு விமானம் வந்தது.

இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காசர்கோட்டை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவர் கொண்டு வந்திருந்த ஒரு பேக்கில் ஏராளமாக பேரீச்சம்பழம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதைத் திறந்து பார்த்தபோது பேரீச்சம்பழத்திற்குள் சிறு சிறு துண்டுகளாக தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 170 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ₹10 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு

பொதுமாறுதல் கலந்தாய்வு: 3,000 ஆசிரியர்கள் இடமாற்றம்

திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல்