சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் என்னை பலாத்காரம் செய்தார்: பாஜ எம்.எல்.ஏ முனிரத்னா மீது மேலும் ஒரு பெண் புகார்

புனே மெட்ரோ ரயில்சேவை நாளை துவக்கம்

லட்டு நெய்யில் கலப்பட விவகாரம்; திருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன்: ஏழுமலையானை தரிசிப்பதை தடுக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு