சிறுசேமிப்பு வட்டி உயர்வு

புதுடெல்லி: இரண்டு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2024 வரையிலான காலகட்டத்தில், குறிப்பிட்ட சிறுசேமிப்புத் திட்டங்கள் மற்றும் தபால் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது.

செல்வமகள் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும், தபால் நிலையத்தில் அளிக்கப்படும் 3 வருட வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து திட்டத்திலும் பழைய வட்டி விகிதம் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா