குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*ஆரஞ்சுப் பழத்தோலை பொடியாக்கி ரசத்துடன் சேர்க்க மணமும், சுவையும் கூடும்.
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
*காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேகவைத்தால் புழுக்கள் அழிவதுடன், காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும்.
*துவரம்பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
*உள்ளங்கையில் சில ெசாட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனைச் சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.
*மாமிசத்தை அளவுக்கு அதிகமாக வேக வைக்கக்கூடாது. மாமிசத்தை அதிகமாக வேக வைத்தால் அது கடினமாகிவிடும்.
*இட்லி, தோசைக்கு மிளகாய் பொடி தயாரிக்கும்போது அதில் வேர்க்கடலையை சிறிது வறுத்துப் போட்டுச் சேர்த்து இடித்தால் பொடி அதிக சுவையுடன் இருக்கும்.
– கே. பிரபாவதி

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது