குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* இரவு மீந்த ஒரு கப் சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, கூடவே மூன்று டீஸ்பூன் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து மோர் விட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
* காய்கறிகள் காய்ந்து போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகளின் தன்மை மாறி புதியதாக இருக்கும்.
* தேங்காயை உடைத்து அடுப்பின் குறைந்த தீயில் தேங்காய் மூடியை நெருப்பில் இருண்டு நிமிடங்கள் சுழற்றி எடுக்கவும். பிறகு கத்தியால் கீறினால் முழுக்கொப்பரையும் அப்படியே ஓட்டை விட்டு வெளியே வந்து விடும். பிறகு பல் பல்லாக கீரி பலகாரங்களுக்கு உபயோகிக்கலாம்.
* பனீர், சீஸ் துண்டுகள் உபயோகித்து பலகாரம் செய்து முடித்ததும் மீதியுள்ள துண்டுகளின் மீது லேசாக எண்ணெய் தடவி அலுமினிய ஃபாயிலில் சுற்றி வைத்தால் அவை புதிதுபோல இருக்கும்.
* குலோப்ஜாமூன் செய்தவுடன் மீதி இருக்கும் பாகில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, சிறிது உப்பும் கலந்து வைக்கவும். தேவையான போது ஜூஸ் போல் சாப்பிடலாம்.
* தோசை மாவில் வெந்தயப்பொடி சேர்த்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
* உளுந்து வடைக்கு உளுந்து அரைக்கும்போது அதனுடன் ஒரு பிடி முட்டைக்கோஸையும் சேர்த்து அரைத்து வடை சுட்டால் வடை பெரிதாகவும், சுவையாகவும் இருக்கும்.
* தயிரில் வரமிளகாய் காம்பை கிள்ளிப்போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.
* எலுமிச்சம்பழ ரசத்திற்கு துவரம்பருப்புக்கு பதிலாக பாசி பருப்புச் சேர்த்து செய்தால் சுவையும், மணமும்அதிகமாக இருக்கும்.
* முளைக்கீரை தண்டுகளை வீணாக்காமல், அதை பொடியாக நறுக்கிப் பொரியல் செய்தால் மிகச்சுவையாக இருக்கும்.
* எள்ளைப் போட்டு வைக்கும் பாட்டில்களில் சிறிது நெல்லைப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* தேநீர் நல்ல வாசமாக இருக்க ஒரு கோப்பைத் தேனீரில் ஒரு சிட்டிகை சாப்பாட்டு உப்பைச் சேர்க்கவேண்டும்.
– கவிதா சரவணன்

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!