குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*தக்காளி சரியாகப் பழுக்காமல், காயாக இருந்தால் ஒரு பாலிதீன் பையில் போட்டு, கட்டி வைத்தால் மறுநாள் நன்றாகப் பழுத்து விடும்.
*ரசம் தயாரிக்கும் போது சிறிது முருங்கை இலை சேர்த்தால் ரசம் நல்ல மணமுடனும், ருசியுடனும் இருக்கும்.புளிக்குழம்பு செய்தால் ¼ தேக்கரண்டி வெந்தயம் போட்டு தாளித்தால் மணமும், ருசியும்சூப்பராக இருக்கும்.
*காய்ந்து விட்ட பிரட்டை இட்லி பாத்திரத்தின் ஆவியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் சாஃப்டாகி விடும்.
*ஜாம் தயாரிக்கும்போது கூடவே இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரை தேக்கரண்டிகிளிசரின் சேர்த்தால் அதிகமான அளவு சீனி சேர்க்க வேண்டிய நிலை ஏற்படாது.
*ஜாம் கெட்டியாகி விட்டால் அதனை பாத்திரத்தோடு சிறிது நேரம்சுடுநீரில் வைத்திருங்கள். இளகி விடும்.
*வழக்காமாக செய்யும் வாழைக்காய் வதக்கல் கறியிலேயே மூன்று பெரிய வெங்காயம் நறுக்கி வதக்கிச் சேர்த்து 2 பிடி வெந்த துவரம்பருப்பு, சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்குவதற்கு முன் சிறிது கடலை மாவு தூவி புரட்டிவிட்டு எடுத்துப் பரிமாறினால் வாழைக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பிசாப்பிடுவார்கள்.
*ஜவ்வரிசி வடாம் துகள்கள் இருந்தால் அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப்போட்டு பிறகு பஜ்ஜி சுடுங்கள். சுவை பிரமாதமாக இருக்கும்.அல்வா தயாரிக்கும்போது இறுதியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் அல்வா பக்குவமாகஉருப்பெறும்.
*தோசைக்கு மாவு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது சுவையாக இருக்கும்.
*தேங்காயைத் துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விடுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால் துருவியது போலவே பூப்பூவாக வந்து விடும்.
– கவிதா சரவணன்

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்