குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்.

*அலுமினியப் பாத்திரங்கள் வாங்கும் போது நல்ல திக்கான பாத்திரங்களாகப் பார்த்து வாங்க வேண்டும்.
*ரசம் இறக்கி வைத்தபின் அதில் ஒரு துளி நெய் சேர்த்து கொத்துமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.
*துருப்பிடித்த கத்திகளின் துருபோக வேண்டுமா? அதை ஒரு வெங்காயத் துண்டினால் நன்றாகத் தேயுங்கள். சிறிது நேரம் கழித்த பிறகு அழுத்த மாகத் துடைத்து எடுங்கள். துருபோயே போச்சு.
*பீரோவில் அடுக்கியிருக்கும் துணியில் கரப்பான் பூச்சிகள் புகுந்துவிடும். இரண்டு, மூன்று வேப்பிலைகளை மடிப்பில் வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
*மழைக்காலங்களில் தீப் பெட்டிக்குள் பத்து பதினைந்து அரிசிகளைப் போட்டு வைத்தால் தீக்குச்சி நமத்துப் போகாது.
*உப்புத்தூளைப் போட்டு கத்தியைத் தேய்த்தால் கத்தி கூர்மையாகும்.
*பிளாஸ்க்குகளை உபயோகிக்காத போது அதில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.
*பீரோ, மேஜை முதலிய சாமான்களை உருளைக்கிழங்கு வேகவைத்து உரித்த தோலை வைத்து துடைக்க அதில் உள்ள கறைகள் அகன்றுவிடும்.
*உணவுத்தொட்டி, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்த வேண்டும்.
*ஆப்பம் செய்வதற்கு முதல்நாள் மாவில் தேங்காய் நீரை சேர்த்து வைத்தால் ஆப்பம் பூவாக இருக்கும்
*கற்பூரம் அடைத்து வைத்திருக்கும் டப்பாக்களில் நான்கைந்து மிளகை போட்டு வையுங்கள். கற்பூரம் காற்றில் கரையாது.
*பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத் தூள் கலந்து காயவைத்து டின்களில் அடைத்துவைத்தால் கெட்டுப் போகாது.
*ஆம்லெட் அதிக ருசி கிடைக்க அதில் சிறிதளவு தேங்காய் சேருங்கள்.
*முட்டைக்கோஸ் கூட்டு வைக்கும்போது அதில் சிறிதளவு இஞ்சி சேருங்கள். சுவை அதிகரிக்கும்.
*நேந்திரங்காய் சிப்ஸ் வறுக்கும் போது ஒரு மஞ்சளையும் இடித்துச் ேசருங்கள். சிப்ஸ் நல்ல நிறம் கிடைக்கும்.
– இரா. கமலம்

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது