குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொதிக்கும் வெந்நீரை இறக்கி வைத்து அதில் போட்டு மூடி வைத்துவிடவும். 15 நிமிடத்தில் பருப்பு பூவாய் மலர்ந்திருக்கும். குழையாமல், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
*நூடுல்ஸ் மீதமாகிவிட்டால் அதனுடன் பச்சைக் காய்களை நறுக்கிப் போட்டு, தயிர் சேர்த்து சாலட் செய்தால் சூப்பராக இருக்கும்.
*பச்சை நிறக் காய்களை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூளைப் போட்டு பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கினால் அவற்றின் நிறம் மாறாமல் இருக்கும். டேஸ்ட்டும் கூடும்.
*பிரட் பழையதாகிவிட்டால் அதில் சிறிது பாலைத் தெளித்து சூடாக்கினால் புதிதாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
*ஆரஞ்சுப்பழத் தோலைத் தூக்கியெறிந்து விடாமல், டீத்தூள் டப்பாவில் போட்டு வைத்தால், டீத்தூள் ஆரஞ்சு மணத்துடன் தேநீரைத் தரும்.
*முறுக்கு மாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துப் பிசைந்து முறுக்கு செய்தால் அதிக மொறுமொறுப்புடன் நெய் மணம் வீசும் முறுக்கு கிடைக்கும்.
*அப்பளம், வற்றல், வடகம் இவற்றுடன் காய்ந்த சிவப்பு மிளகாயையும் போட்டு வைத்துவிட்டால் வண்டுகள், பூச்சிகள் வராது.
*இட்லி, தோசைக்கு உளுந்து அரைக்கும் போது தண்ணீருக்குப் பதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரைத்தால் மாவு பொங்கி நிறைய காணும்.
*வெண்ணெயை உருக்கி நெய்யாக்கும்போது, அடுப்பிலிருந்து இறக்கும் போது சிறிது மோர் விட்டால் நெய் நல்ல மணமுடனும், சுவையுடனும் இருக்கும்.
– எம். ஏ. நிவேதா,
அமுதா அசோக்ராஜா

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு