குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*அதிரசம் செய்யும்போது ஈர அரிசிமாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும். மாவு உலர்ந்திருந்தால் அதிரசம் சரியாக வராது. அதே போல பாகு காய்ச்ச பாகு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
*கறிவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் நான்கைந்து நாட்களானாலும் வாடாது.
*தக்காளிப் பழச்சாறுடன் சாத்துக்குடி சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சரியாகும்.
*குப்பைமேனி இலையுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து மைய அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தேவையற்ற முடிகள் உதிரும்.
*ரசம் கொதித்த பிறகு அரை டம்ளர் முதல் ஒரு டம்ளர் வரை கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பை அணையுங்கள். பிறகு வழக்கமான தாளிப்பை சேருங்கள். ரசம் ருசிக்கும்.
*பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்குவதற்குள் ஒரு வழியாகி விடும்.
*பீட்ரூட்டை முழுவதுமாகவோ அல்லது பாதி நறுக்கியோ வேகவைத்து பிறகு தோலை உரித்துவிட்டு நமக்கு வேண்டிய அளவில் நறுக்கினால் சுலபமாக நறுக்க வரும். நேரமும் மிச்சமாகும்.
*சருமத்தில் அரிப்பு சிலந்தியால் அவதிப்படுகிறீர்களா? அரிசி வடிந்த கஞ்சியை எடுத்து பாதிப்புள்ள பகுதியில் அல்லது உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்துக் குளித்து வந்தால் பிரச்னைகள் நாளடைவில் சரியாகும்.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு எடுக்க வரவில்லையா? தோசைக்கல் முழுவதும் படும்படி கல்உப்பை பரவலாகத் தூவி, ஐந்து நிமிடங்களுக்கு பிறகு உப்பை எடுத்துவிட்டு தோசை ஊற்றுங்கள். உடையாமல் வட்டமாக எடுக்க வரும் ேதாசை.
*தினசரி தேன் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி மறையும். குரல் வளமாகும். ஆயுளும் கூடும்.
*பாகற்காய் சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, காச நோய், ரத்தசோகை நீங்கும். குடல் புழுக்கள் அழியும்.
*மெலிதான உடல் தோற்றம் கொண்டவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்தநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குண்டாகும்.
*மலைவாழைப் பழத்தைச் சாப்பிட்டால் சூட்டை தணிக்கும். பித்தத்தை போக்கும். மலச்சிக்கலை அகற்றும்.
*வாழைப்பூவின் சாறை தயிருடன் கலந்து சாப்பிட ரத்தபேதி குணமாகும். கை-கால் எரிச்சல், இருமல், மூலம், மேக நோய்கள் குணமாகும்.
*தொடர்ந்து 90 நாட்கள் இளநீர் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
– அ.ப. ஜெயபால்

Related posts

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி