குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* லவங்கப்பட்டை, சோம்பு இவற்றை லேசாக வறுத்து, பொடி செய்துகொண்டு, உருளைக் கிழங்கு, பட்டாணி போன்ற வற்றுக்கு மசாலாவுடன் ஒரு ஸ்பூன் சேர்த்துவிட்டால் மணமணக்கும்.
* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அதனுடன் வறுத்த சேமியாவையும் நொறுக்கிப்போட்டு, வறுத்த முந்திரியையும் சேர்த்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் பால் சூடாக விட்டு, கிளறி திடீர் பாயசம் செய்யலாம்.
* கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றை அதிகம் வதக்காமல் பச்சையாக உணவில் சேர்த்துக் கொண்டால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.
* தோசை மாவு புளித்துவிட்டால் ஒரு ஸ்பூன் சர்க்கரையைக் கலந்துவிட்டால் புளிப்பு இருக்காது.
* இட்லி, தோசை மாவு ஒரு லிட்டருக்கு ஒரு ஸ்பூன் வீதம் மிளகாய்த்தூள் கலந்துவிட்டால் மாவில் புளிப்பே இருக்காது.
* சாம்பாரை இறக்கும் முன்பு ஒரு ஸ்பூன் தனியா விதை, ஒரு வரமிளகாய் வறுத்து கரகரவென அரைத்து பொடியைக் கலக்கினால் மணம் வீசும்.
* இட்லிக்கு அரைக்கும் உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு, ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
* மக்காச் சோளத்தை ரவை போல் அரைத்து அதில் ஒரு பங்குக்கு அரைபங்கு உளுந்து ஊறவைத்து அரைத்து, மறு நாள் இட்லி சுட்டால் சுவையாக இருக்கும்.
* கால் டம்ளர் பச்சரிசி, 1 சிவப்பு மிளகாய், சிறிது பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது இப்பொடியைச் சேர்த்து வதக்கினால் சூப்பராக இருக்கும்.
* மேத்தி சப்பாத்தி செய்யும்போது நறுக்கிய வெந்தயக்கீரை, பாலக்கீரையை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, கால் கப் பாசிப்பருப்பு சேர்த்துச் செய்தால் சூப்பராக இருக்கும்.
* மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக்கி, ஊறவைத்து, உளுத்தம் பருப்போடு சேர்த்து அரைத்து வடை செய்தால் சூப்பராக இருக்கும்.
* மோர்க்களி கிளறும்போது அரிசிமாவு 3 கப், மைதா ஒரு கப் கலந்து கிளறினால் டேஸ்ட்டாக இருக்கும்.
– எம்.ஏ.நிவேதா

 

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை