குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிது வெண்ணெயைக் கலந்து வைத்தால் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
* பலகாரம் செய்யும் எண்ணெயில் இரண்டு மூன்று கொய்யா இலைகளை போட்டு விட்டால் எண்ணெய் பொங்கி வழியாது.
* பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய்க் கறை உடையில் பட்டு விட்டால் அந்த இடத்தில் கோதுமை மாவைத் தேய்த்து தண்ணீரில் அலசி எடுத்தால் போதும். எண்ணெய்க் கறை நீங்கிவிடும்.
* ஏலக்காய்த் தோலை டீத்தூளில் போட்டு வைத்தால் டீ ஏலக்காய் மணத்துடன் சூப்பராக இருக்கும்.
* காபிப்பொடியை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி, ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் நீண்ட நாட்களுக்கு மணம் அப்படியே இருக்கும்.
* விருந்தினர்கள் நண்பர்களுக்கு காபி, டீயில் சர்க்கரை போடாமல், சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் அல்லது மரக் கலக்கி வைத்துவிடுங்கள். ஏனெனில் யாருக்கு என்ன உடல் பிரச்னை இருக்கிறது என்பது இப்போதெல்லாம் தெரிவதில்லை.
* டீத்தூளை சிறிது நேரம் வெயிலில் உலர வைத்து, பிறகு டீ போட்டு சாப்பிட்டால் டீ மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* பயன்படுத்தப் பட்ட டீ. காபி தூளை செடிகளுக்கு போட்டால் நல்ல உரமாகும்.
* ஏலக்காயை பொடி செய்தால் எளிதில் பொடியாகாது. இதைத் தவிர்க்க ஏலக்காயுடன் சிறிது சீனி சேர்த்துப் பொடித்தால் எளிதில் பவுடர் போல் ஆகிவிடும்.
* எந்தவித பலகாரம் செய்தாலும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்து பலகாரம் செய்து எண்ணெயில் போட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
* சாறு எடுத்தவுடன் திராட்சைச் சக்கையை கொண்டு பழக்கூழ் தயாரிக்கலாம்.
* டீ போட்டவுடன் டீத்தூளை உலர்த்தி அதில் புகை போட்டால் ஈ, கொசுத்தொல்லை இருக்காது.
* சூடான டீ காபியை உடனே கண்ணாடி டம்ளரில் ஊற்றிவிட வேண்டாம். டம்ளரில் ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு பிறகு சூடானவற்றை ஊற்றினாலும் டம்ளர் உடையாது.
* தேநீரை ஊற்றுவதற்கு முன்பு டம்ளரில் ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலைப் போட்டு, டீயை ஊற்றி, சிறிது நேரத்தில் தோலை எடுத்துவிட்டால் டீ மணமுடனும் ருசியுடனும் இருக்கும்.
– எம். ஏ. நிவேதா

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு