குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த ருசியாக இருக்கும்.
* குலோப் ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால் அதில் மைதாமாவு சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்திபோல் திரட்டி சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் தயார்.
*உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
* குலோப் ஜாமூன் ஆறவைத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் விழாது, உடைந்தும் போகாது.
* பருப்பு வகைகளை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.
*கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலையையும் சேர்த்தால் வண்டு வராது.
* தேங்காயோடு பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
*பொதுவாக எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப் போகாது. வடநாட்டினர் பெரும்பாலும் பின்பற்றும் வழிமுறையும் இதுதான்.
* பீட்ரூட்டை உலர வைத்து பொடிசெய்து செயற்கை கலருக்கு பதிலாக உணவுகளில் பயன்படுத்தலாம். உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகான நிறங்களிலும் இருக்கும். உடலுக்கும் எந்த கெடுதலும் விளைவிக்காது.
* சமையல் செய்யும்போது உடலில் சூடான எண்ணெய் பட்டு விட்டால், அந்த இடத்தில் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளம் வராது.
– அ.ப. ஜெயபால்

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது