குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை இயற்கையாகவும், கல் வைத்துப் பழுக்க வைப்பது பலரது வழக்கம். இயற்கையாக பழுத்த பழங்களில் தான் சத்தும், சுவையும் அதிகம். நாம் வாங்கும் பழங்கள் செயற்கை ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டனவா என்பதைத் தெரிந்து கொள்ள சில குறிப்புகள் இருக்கின்றன. இயற்கையாகப் பழுத்த பழங்களில் வாசனை தூக்கலாக இருக்கும். பழத்தின் மேல் தோல் ஒரே நிறத்தில் இல்லாமல் திட்டுத்திட்டாக மஞ்சள், பிங்க் என பல நிறங்களில் காணப்படும். மேல் தோல் அடிபட்டு தண்டுகளில் லேசாக பிளவுபட்டும் இருக்கலாம்.
*வெல்லத்தை பொடிக்க முடியாதபடி சில நேரங்களில் கெட்டியாக இருக்கும். கேரட் துருவியால் வெல்லத்தை துருவி பாட்டிலில் போட்டுவைத்தால் தேவைப்படும் போது எடுத்து
உபயோகிப்பது சுலபம்.
*சர்க்கரையில் எறும்புகள் வந்து தொல்லை தருகின்றனவா? சர்க்கரை டப்பாக்களில் நான்கு கிராம்புகளைப் போட்டு வைக்கவும். எறும்புகள்
அண்டாது.
*திருமண அழைப்பிதழ்கள் நிறையச் சேர்ந்து விட்டால் அதை பயனுள்ள வகையில் உபயோகிக்கலாம். சமையல் அறையில் இருக்கும் அலமாரி தட்டுகளை அளவுகேற்ப அட்டைகளை வெட்டி வைத்து மளிகை சாமான்கள், பொடி வகைகள் போட்டு வைக்கும் பாட்டில்கள் வைக்கும் இடத்தில் பயன்படுத்தலாம், அலமாரி தட்டுகளில் கறைப்படியாமலும் இருக்கும். மளிகைப் பொருட்கள் சிந்தினால் துடைக்க வசதியாகவும் இருக்கும்.
*கோதுமை மாவில் பூச்சி புழுக்கள் வராமல் இருக்க இரண்டு தேக்கரண்டி உப்பை கலந்து வைக்கவும். உளுந்தம்பருப்பு வைத்துள்ள டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க நான்கைந்து வரமிளகாய்களை உளுந்துக்குள் புதைத்து வைக்கவும்.
*சாம்பார் வைக்கும் போது சில நேரங்களில் பாத்திரத்துக்கு வெளியே பொங்கி வழிந்து விடும். அதைத் தவிர்க்க சாம்பாரின் மீது இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி விட்டால் போதும் பொங்கி வழியாது.
*கொப்பரை தேங்காயில் இருக்கும் வெள்ளை முற்பகுதியை துருவ சில நிமிடங்கள் வெயிலில் காய வைக்கவும். பிறகு வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸ், லட்டு, தேங்காய் லட்டு, டரை குளோப் ஜாமூன் செய்யும்ே பாது இந்தத் தேங்காய் துருவலைப் பயன்படுத்தலாம்.
– அ. ப. ஜெயபால்

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு