குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

*பூண்டை ஒரு மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்து, பிறகு தோலை உரித்தால் எளிதில் உரிந்துவரும்.
* பச்சைப் பட்டாணியை வேகவைக்கும்போது சிறிது சர்க்கரையை தூவிவிட்டால் நிறமும் மாறாது. சுவையும் கூடும்.
* கோதுமை மாவையும், பார்லியையும் சம அளவில் கலந்து சப்பாத்தி செய்தால் டேஸ்ட்டாக இருக்கும்.
* எலுமிச்சைச் சாறு தயாரிக்கும்போது சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.
* காய்கறி சாலட் செய்யும்போது சில பிரட் துண்டுகளைப் போட்டு விட்டால் சாலட்நீர்த்துப் போகாமல் புதுவித டேஸ்ட்டுடன் இருக்கும்.
* ஐஸ்கிரீம் செய்ய பாலை தேவைக்கு அதிகமாக சுண்டக்காய்ச்சக் கூடாது. அப்படிசெய்தால் சுவை குறைந்து விடும்.
* குலாப் ஜாமுனுக்கு உருண்டைகளை உருட்டும்போது கைகளில் நெய் தடவிக்கொண்டால் கைகளில்ஒட்டாது.
* வெள்ளரிக்காய்களை சிலைஸ்களாக நறுக்கிக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து செய்தால் பஜ்ஜி சூப்பராக இருக்கும்.
* எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களை வெந்நீரில் போட்டு வைத்துப்பின்னர் பிழிந்தால் சாறு கூடுதலாகக் கிடைக்கும்.
* குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் சிறிதளவு வறுத்த அரிசிப் பொடியைத் தூவினால் சரியாகிவிடும்.
* பருப்பு வகைகளை வேக வைக்கும் போது சுத்திகரித்த எண்ணெயோ, அல்லது சிறிது பூண்டை போட்டு விட்டால் சுவையும் கூடும், வாயுக் கோளாறையும் குறைக்கும்.
* கொதிநீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து விட்டால் உருளைக்கிழங்கு நன்றாக வெந்துவிடும்.
– அமுதா
அசோக்ராஜா

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு