எடப்பாடிக்கு எதிராக கோஷம் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

 

அவனியாபுரம்: சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை ஒரு அரசு மீறுவது என்பது இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக தான் அர்த்தம். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வதை தடுக்க தமிழக முதல்வர் மற்றும் பிரதமரும் இலங்கை அரசை தொடர்பு கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தால் மக்கள் திட்டங்கள், மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது. இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.

பசும்பொன்னில் இபிஎஸ்க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக பசும்பொன் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித தொந்தரவு துயரத்தை கொடுக்கக் கூடாது என்று தெரிவித்து இருக்கிறேன். நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு கவர்னர் மாளிகை முன்பு குண்டு வீசுவது தீர்வாகாது. அது மிகவும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்