கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம்: அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டார்

சென்னை: தொழிலாளர் துறையால் தயாரிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்தான விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டார். கொத்தடிமைத் தொழிலாளர் முறை சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் பெரிய அச்சுறுத்தலாகவும், தடைக்கல்லாகவும் அமைந்துள்ளது. இதை 2030க்குள் தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றிட அரசு உறுதி பூண்டுள்ளது. தொழிலாளர் துறையின் சீரிய முயற்சிகளால், 1.4.2017 முதல் 30.11.2023 வரை 1612 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, ரூ.3.52 கோடி உடனடி நிவாரணத் தொகைவழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்களின் பேரில் சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதில் ஒரு அங்கமாக 2023-24ம் நிதியாண்டில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்தான விழிப்புணர்வு குறும்படத்தை தயாரிக்க ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு, குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படம் கொத்தடிமைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நிகழ்வில், துறை செயலாளர் குமார் ஜயந்த், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் மற்றும் கூடுதல் தொழிலாளர் ஆணையர் (நிர்வாகம்) ஹேமலதா பங்கேற்றனர். 6 பேருக்கு பணிநியமனம்: தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் பணியில் இருந்தபோது இறந்த அரசு பணியாளர்களின் 6 வாரிசுதாரர்களுக்கு அமைச்சர் கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு