வானில் இருந்து விழுந்த மர்மபொருள்

*நாகை அருகே பரபரப்பு

நாகப்பட்டினம் : நாகை அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறிய அளவிலான மர்மபொருள் ஒன்று வானில் இருந்து கீழே விழுந்தது. அந்த மர்ம பொருளில் சிகப்பு நிற மின்விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்ததை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த ஊராட்சி மன்றத்தலைவர் ரஜினிதேவி, திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், மர்மபொருளை கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து சென்று ஆய்வு செய்ததில்,
அந்த மர்ம பொருள் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான கருவி என்றும், வானிலை ஆராய்ச்சிக்காக தொடர்ந்து அனுப்பப்படும் கருவி என்பதும், அந்த கருவியால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என தெரிய வந்தது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!