ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் நிறுவனம், ஸ்கோடா எனியாக் ஐவி என்ற எலக்ட்ரிக் காரை ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இது சந்தைப்படுத்தப்பட்டால், இந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யும் முதல் எலக்ட்ரிக் காராக இருக்கும். இந்தக் காரில் 52 கிலோவாட் அவர் , 58 கிலோவாட் அவர் மற்றும் 77 கிலோவாட் அவர் என 3 வித பேட்டரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 510 கி.மீ தூரம் வரை செல்லலாம். பேட்டரி திறனுக்கு ஏற்ப இதில் மாறுபடும். 125 வாட்ஸ் சார்ஜர் மூலம் 5 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் அளவுக்கு 38 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். 13 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, அடாஸ் தொழில்நுட்பங்கள் உள்ளன.