ஸ்கோடா சூப்பர்ப்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஸ்கோடா சூப்பர்ப் லக்சரி செடான் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லாம்ப், எல் வடிவ டிஆர் எல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்லீக் பம்பர், 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 3 மண்டல கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 12 ஸ்பீக்கர் 610 வாட்ஸ் கான்டன் சவுண்ட் சிஸ்டம், 9 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கன்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.54 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு