சிவகாசியில் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்காக அறிமுகம்; தீபாவளிப் பண்டிகை களைகட்டும் என்று வியாபாரிகள் நம்பிக்கை..!!

விருதுநகர்: அனைத்து தரப்பினரையும் பரவசப்படுத்தும் நிலையில், சிவகாசியில் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், கடைகளில் பட்டாசுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் போட்டி வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்படும் எலக்ட்ரிக் பட்டாசுக்கு ஈடான 10க்கு 10 ஐபிஎஸ் ஸ்ஷாட்ஸ், குழந்தையை குஷிப்படுத்தும் ஃபயர் எக், மோட்டு பட்லு, மதுரை மல்லி, சின்சான் என வித்தியாசமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசுகளை வாங்கி, தீபாவளி கொண்டாட குழந்தைகள் தயாராகி வருகின்றன. அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் புதுரக பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால் இந்த வருட தீபாவளி களைகட்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!