சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 4 மாதங்களாக கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் வேலாயுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே மதகுபட்டியில் தனியார் நகை அடகு கடை உள்ளது. மதகுபட்டியை சேர்ந்த பாண்டித்துரை உள்பட 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து பாண்டித்துரைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவர் வந்து பார்த்தபோது கடையின் இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளையையை அடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 4 மாதங்களாக கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் வேலாயுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

வடகிழக்கு பருவமழை எதிரொலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகளை வாங்கிய சென்னை மாநகராட்சி!!

மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த்

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’: ரசித்து மகிழ்ந்த மக்கள்!