ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 17,081 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம்/சிவகங்கை : ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 17,081 பேர் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (தொகுதி) குரூப் – 4 தேர்வு நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ். மங்கலம் திருவாடானை ஆகிய தாலுகாக்களில் உள்ள 146 மையங்களில் உள்ள 165 அறைகளில் தேர்வு நடைபெற்றது.தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 41,445 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நேற்று 32,863 நபர்கள் தேர்வு எழுதினர்.8,582 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வினை கண்காணிக்க முதுநிலை வருவாய் அலுவலர் நிலையில் ஆய்வு அலுவலர்களாக 125 பேரும், துணை ஆட்சியர் நிலையில் 9 கண்காணிப்பு அலுவலர்களும், கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு செல்லும் பணியில் 39 நகர்வு குழுக்களும், 11 பறக்கும் படையினரும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் நகர்வு குழுக்கள் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் கருவூலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

மாவட்டம் முழுவதும் தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.இதனையொட்டி நேற்று கீழக்கரை மற்றும் கடலாடி அருகே உள்ள சிக்கல் தேர்வு மையங்களில் தேர்வினை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது தாசில்தார்கள் கீழக்கரை பழனிக்குமார் , கடலாடி ரெங்கராஜன் ஆகியோர் உடனிருந்த
னர்.சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 39ஆயிரத்து 242பேர் விண்ணப்பித்திருந்தனர். சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9வட்டங்களில் 140தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது.

விண்ணப்பித்திருந்தவர்களில் 30ஆயிரத்து 743பேர் தேர்வெழுதினர். 8,499பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு கண்காணிப்பு பணியில் 140முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 22நகர்வுக் குழுக்கள், 22பறக்கும் படையினர், 140ஆய்வுக் குழுவினர் ஈடுபட்டனர். சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசுக்கலை கல்லூரியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் ஆஷாஅஜித் ஆய்வு செய்தார்.

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி