சிவகங்கை அருகே கீழக்கண்டனையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழக்கண்டனையில் தொடக்க மேலாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வரவு, செலவு வைத்து வருகின்றனர். மானிய விலையில் உரம் மற்றும் தங்க நகை மூலம் பணம் பெறுவது போன்றவற்றிற்கு இந்த வங்கிகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கூட்டுறவு வங்கிக்குள் நள்ளிரவில் சிசிடிவி இணைப்பை துண்டித்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். கொள்ளையடிக்க முயற்சித்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டதால் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் இருந்த 4 கிலோ தங்க நகைகள் தப்பின. கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!