தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு… சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது!!

டெல்லி : தமிழ்நாடு அரசின் தொடர் எதிர்ப்பால் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு வைத்திருந்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அகாலி கிராமத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய நீர்வளத்துறை ஆணையமும் மற்றும் மத்திய நீர்வளம், சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் அணையை கட்ட அனுமதி கோரி, விரிவான வரைவு அறிக்கையை ஒன்றிய மதிப்பீட்டு குழுவிற்கு கேரளா அனுப்பி இருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த மதிப்பீட்டு குழு அதில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாததால் கேரள அரசின் கோரிக்கை நிராகரித்துள்ளது. அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து குறிப்பிடப்படாத நிலையில், மாநிலங்களுக்கு இடையே சுமூகமான தீர்வை கண்டு ஒன்றிய நீர்வளத்துறை ஆணையத்திடம் முதலில் அனுமதி பெற கேரள அரசை மதிப்பீட்டு குழு அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு சிறுவாணி ஆற்றின் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், அந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் குறித்து கேரள அரசு எந்த தகவல்களையும் தங்களுக்கு வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!