சீர்காழியில் பொதுமக்களுக்கு ரத்த வகை கண்டறியும் முகாம்

 

சீர்காழி, நவ. 4: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது. அப்போது ரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்த வகை கண்டறிதல் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜ்கமல், ரோட்டரி சங்க தலைவர் சத்திய நாராயணன், செயலாளர் சுரேஷ் குமார், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியன், கல்யாண சுந்தரம், சுசீந்திரன், மணிகண்டன், கந்தசாமி கலந்து கொண்டனர். சீர்காழியில் இயங்கக்கூடிய அப்துல் கலாம் நர்சிங் கல்லூரினுடைய தாளாளர் மதியழகன் தலைமையில் ஏராளமான கல்லூரி பயிற்சி பெரும் நர்சிங் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் , பள்ளியின் உதவி தலைமையாசிரியருமான முரளிதரன் ஏற்பாடுகளை செய்து நன்றி கூறினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்