சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்

செங்கல்பட்டு: சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று நேற்று கேரளா மாநிலத்திற்கு சென்றது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்றபோது மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார். மினி லாரியில் இருந்த மீன்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து மினி லாரி டிரைவர் சதீஷ்(28) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மீட்பு வாகனம் மூலமாக சாலையில் கவிழ்ந்து கிடந்த மினி லாரியை அகற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மினி லாரி கவிழ்ந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு