சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் வெளியேறினர் சிந்து, பிரணாய்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் உள்ளரங்கத்தில் சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் சர்வதேசப் போட்டி நடந்து வருகிறது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நேற்று இந்தியாவின் பி.வி.சிந்து(28வயது, 12வது ரேங்க்), ஸ்பெயின் வீராங்கனை(30வயது, 3வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை சிந்து 21-13 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது செட்டை கரோலினா 21-11 என்ற புள்ளக் கணக்கிலும் கைப்பற்றினர். அதனால் வெற்றி யாருக்கு என்பதை முடிவுச் செய்யும் 3வது செட்டி அனல் பறந்தது.

இருவரும் மாறி, மாறி முன்னிலைப் பெற்றனர். முடிவில் கரோலினா 22-20 என்ற புள்ளிக் கணக்கில் 3வது செட்டையும் வசப்படுத்தினார். அதனால் ஒரு மணி 8 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் சிந்து வெளியேற, கரோலினா 2-1 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஒன்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்(31வயது, 10வது ரேங்க்), ஜப்பானின் கென்டா நிஷிமோடோ(29வயது, 11வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர்.

அந்த ஆட்டத்திலும் நிஷிமோடோ 21-13, பிரணாய் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் ஆளுக்கொரு செட்டை வசப்படுத்தினர். அதனால் 3வது செட்டில் வெற்றிப் பெற 2 வீரர்களும் மல்லுக்கட்டினர். கடைசி செட்டின் ஆரம்பத்தில் பிரணாய் முன்னிலைப் பெற்றார். ஆனால் கடுமையாக போராடிய நிஷிமோடோ அந்த செட்டையும் 21-15 என தனதாக்கினார்.

அதனால் ஒரு மணி 18 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 1-2 என்ற செட்களில் பிரணாய் போராடி இழந்தார். முதல் சுற்றிலேயே பல இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். எஞ்சி சிந்து, பிரணாய் ஆகியோரும் நேற்று வெளியேற, சிங்கப்பூர் ஓபனில் இந்தியர்களின் ஆட்டம் 2வது சுற்றுடன் முடிந்தது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை