சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து: பிரணாய் முன்னேற்றம்


சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். ங்கப்பூர் உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனை லைன் ஹோஜ்மார்க் (30 வயது, 21வது ரேங்க்) உடன் மோதிய சிந்து (28 வயது, 12வது ரேங்க்) 21-12, 22-20 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். விறுவிறுப்பான இப்போட்டி 44 நிமிடங்களுக்கு நடந்தது. ண்கள் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியம் வீரர் ஜூலியன் கார்ரக்கியை (23 வயது, 45வது ரேங்க்) எதிர்கொண்ட இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் (31 வயது, 10வது ரேங்க்) 21-9, 18-21, 21-9 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் நீடித்தது. ண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கிடாம்பி காந்த், லக்‌ஷயா சென் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன்/ஆதயா வாரியத், சுமீத் ரெட்டி/சிக்கி, வெங்கட் கவுரவ்/ஜூஹி தேவாங்கன் ஜோடிகள் தோல்வியை சந்தித்தன. மகளிர் இரட்டையர் பிரிவில் தனிஷா கிரேஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணையும் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை