நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல்கள்: அன்புமணி வலியுறுத்தல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கடத்தூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்திலும், சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்திலும் நடத்த வேண்டும். உரிய பங்கீட்டின்படி, காவிரி நீர் தர கர்நாடகா அரசு மறுக்கிறது.

தமிழக முதல்வர் கர்நாடக மாநில முதல்வரை நேரில் சந்தித்து பேச வேண்டும். ஒகேனக்கல் உபரிநீர் திட்டம், எண்ணேகொல்புதூர் -தும்பலஅள்ளி உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி சிப்காட்டில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். தக்காளிக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்ட தக்காளி, புளிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்’ என்றார்.

Related posts

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்