சில்லிபாயிண்ட்….

 

* உலக கோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் அணி தங்கியிருந்த விடுதி, நியூயார்க் விளையாட்டு அரங்கத்தில் இருந்து அதிக தொலைவில் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் செய்திருந்தது. அதனால் அரங்கத்துக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு விடுதிக்கு அவர்களை ஐசிசி மாற்றியுள்ளது.

* இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நேற்று குவைத்துக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். ‘சுனில் ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரர்’ என்று குரேஷியா கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான லூகா மோட்ரிக் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

* ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே 2007ம் ஆண்டு நடந்த உலக கோப்பை பைனலுக்கு முன்பு எப்படி இருந்ததே, அதே பதற்றம் தான் வாக்கு எண்ணிக்கையின் போதும் இருந்தது’ என்று புதிய எம்பியும், முன்னாள் வீரருமான யூசப் பதான் தெரிவித்துள்ளார்.

* யூசப் பதான் போலலே திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வென்றுள்ள இன்னொரு கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். இவர் 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற கபில் தலைமையிலான அணியில் விளையாடியவர்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை