சில்லிபாயின்ட்…

* இங்கிலாந்து வேகம் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் தனது 700வது விக்கெட்டாக நேற்று குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார்.

* டெஸ்ட் விக்கெட் வேட்டையில் முரளிதரன் (800, இலங்கை), ஷேன் வார்ன் (708, ஆஸி), ஆண்டர்சன் (700, இங்கி.), கும்ப்ளே (619), ஸ்டூவர்ட் பிராட் (604, இங்கி.) முன்னிலை வகிக்கின்றனர். இவர்களில் ஆண்டர்சன் மட்டுமே தற்போது களத்தில் உள்ளார்.

* எம்ஆர்எப் வேகப்பந்துவீச்சு பயிற்சி அறக்கட்டளையின் ‘ஏஸ் ஆஃப் பேஸ்’ தேர்வு முகாம் கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னையில் நடைபெற்றது. இறுதி தேர்வு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நேற்று நடந்தது. ஆஸி. நட்சத்திரம் கிளென் மெக்ராத் முன்னிலையில் நடந்த தேர்வில் ஜஸ்கரன் சிங் (20, ராஜஸ்தான்), முகமது இசார் (20, பீகார்), முகமது சர்ஃபராஜ் (20, ஜார்க்கண்ட்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* பிரைம் வாலிபால் லீக் தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 5 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 5 சுற்று நாளை தொடங்குகிறது.

* ஒரு சீசனில் குறைந்தபட்சம் 75 சதவீத டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரருக்கு, வழக்கமாக ஒரு போட்டிக்கு கிடைக்கும் ரூ.15 லட்சத்துடன் கூடுதலாக தலா ரூ.45 லட்சம், 50-75 சதவீத போட்டிகளில் விளையாடும் வீரருக்கு கூடுதலாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

* கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசி. முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்ட நிலையில், ஆஸி. 256 ரன் குவித்து ஆட்டமிழந்தது. நியூசி. தரப்பில் மேட் ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தினார். 94 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூஸி. 2வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்துள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்