சில்லிபாயிண்ட்….

* ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் 2 லீக் ஆட்டங்களில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் என பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

* பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் முதல் முறையாக 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக், கோகோ காஃப், அசரெங்கா, வோஸ்னியாக்கி, ஹடாட் மாயா, ரைபாகினா தகுதி பெற்றுள்ளனர்.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச், சிட்சிபாஸ், பிரிட்ஸ், டியபோ, டொமினிக் தீம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

* மகளிர் பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து விலகுவதாக இந்திய அணி துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அறிவித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு