சில்லி பாயின்ட்…

  • லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஆர்சிபி அணி பந்துவீச்சில் தாமதமாக செயல்பட்டதற்காக அந்த அணி கேப்டன் டு பிளெஸ்ஸிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில் லக்னோ அணி வென்றதும் தான் அணிந்திருந்த தலைக்கவசத்தை கழற்றி தரையில் ஓங்கி அடித்த ஆவேஷ் கான் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.
  • ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக 62 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்ற லக்னோ வீரர் நிகோலஸ் பூரன், அந்த விருதை தனது மனைவிக்கும் சமீபத்தில் பிறந்த குழந்தைக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்.
  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் நடக்கும் பில்லி ஜீன் கிங் கோப்பை ஆசியா/ஓசனியா பிரிவு-1 டென்னிஸ் போட்டியில், இந்தியா 2-1 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. நட்சத்திர வீராங்கனை அங்கிதா ரெய்னா ஒற்றையர் ஆட்டத்திலும், ருதுஜா போசலேவுடன் இணைந்து இரட்டையர் ஆட்டத்திலும் வெற்றிகளைக் குவித்தார்.

Related posts

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போதுமான வசதிகளை செய்து தந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்