சில்லி பாய்ன்ட்…

* ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட நட்சத்திர வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) தகுதி பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் – அல்கராஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.
* ஜமைக்கா நட்சத்திரம் ஷெரிகா ஜாக்சன், மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
* ஆண்கள் டிரையத்லான் போட்டியில் கிரேட் பிரிட்டன் வீரர் அலெக்ஸ் யீ (1:43:33) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நியூசிலாந்தின் ஹேடன் ஒயில்டு (1:43:39) வெள்ளிப் பதக்கமும், பிரான்சின் லியோ பெர்கெரே (1:43:43) வெண்கலமும் வென்றனர்.
* மகளிர் கலைநய ஜிம்னாஸ்டிக்ஸ் குழு போட்டியில் அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. இத்தாலி வெள்ளி, பிரேசில் வெண்கலம் வென்றன.
* ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் அசத்தல்
இலங்கை அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பரபரப்பான சூப்பர் ஓவரில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது (இந்தியா 137/9; இலங்கை 137/8; சூப்பர் ஓவர்: இலங்கை 4 பந்தில் 2 ரன், 2 விக்கெட்; இந்தியா 1 பந்து, 4/0). ஆட்ட நாயக: வாஷிங்டன் சுந்தர், தொடர் நாயகன்: கேப்டன் சூரியகுமார். அடுத்து இந்தியா – இலங்கை அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாசா அரங்கில் நாளை பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி